என் மலர்
நீங்கள் தேடியது "தமிழக அரசு"
- தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது.
- மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் பெண்களுக்கு தேர்தல் காலத்தில் வரும் 3 மாத உரிமைத் தொகை மற்றும் கோடைகால ஊக்கத் தொகை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை சேர்த்து ரூ.5 ஆயிரத்தை மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கி தமிழக அரசு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
தமிழகம் முழுவதும் தமிழக அரசின் இந்த திடீர் பரிசுத்தொகை பேசு பொருளாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் இதுபற்றி ஒவ்வொரு விதமாக பேசுகின்றன. இதையே சமூகநல ஆர்வலர் ஒருவர் வேறு விதமாக அணுகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையை சேர்ந்த சங்கரபாண்டி என்ற அந்த சமூக ஆர்வலர் தனது மனைவி பெயருக்கு அரசு அனுப்பி இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும் மனைவி ஒப்புதலுடன் மணி ஆர்டர் மூலம் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபற்றி குறிப்பிட்டு உள்ள அவர் 'கடன் சுமையுடன் இருக்கும் தமிழக அரசுக்கு என் பங்களிப்பாக இருக்கட்டும் என்று கடிதம் எழுதி உள்ளார். தன் பணத்தை திருப்பி அனுப்பியதை சமூக வலைத்தளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். இது பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
- கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார்.
நாகர்கோவில்:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக, அவர் குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் வருகை தருவதாக இருந்தது. பின்னர் அந்த தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டு 23, 24 ஆகிய தேதிகளில் வருகை தருவார் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், முதலமைச்சரின் சுற்றுப்பயண தேதி மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய அட்டவணையின்படி, பிப்ரவரி 24 மற்றும் 25-ந்தேதிகளில் அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
முதல் நாள் அன்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, புத்தளம் கல்லடிவிளையில் மு.க.ஸ்டாலின் படைப்பகம் மற்றும் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து உரையாற்றுகிறார். பின்னர் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். அன்று இரவு அவர் நாகர்கோவிலிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதன்பிறகு மறுநாள் காலை நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையை தூய்மைப்படுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விழா நடைபெறும் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேடை மற்றும் பந்தல் அமைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். விழாவிற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா மற்றும் அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலத்தை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்திருந்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் குமரி மாவட்டத்திற்கு வருகை தருவது தி.மு.க. நிர்வாகிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் வருகை குமரி மாவட்ட தேர்தல் களத்தை சூடுபடுத்தி உள்ளது.
- திடீரென கூடங்குளம் ஊராட்சியை இணைப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
- கூடங்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கூடங்குளம் கிராமத்தில் நீண்ட நாட்களாக குடிநீர் பற்றாக்குறை பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வள்ளியூர் வட்டார பகுதியில் செயல்படுத்தப்படும் ரூ.605 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தை இணைத்திட முதலில் உத்தரவிடப்பட்ட நிலையில் திடீரென கூடங்குளம் ஊராட்சியை இணைப்பில் இருந்து நீக்கிவிட்டனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் பஞ்சாயத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை மாற்றி, புதிய குடிநீர் திட்டத்தில் கூடங்குளம் கிராமத்தையும் இணைக்க வேண்டும் எனக்கோரி கிராம மக்கள் கூட்டம் போட்டு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தமிழக அரசை கண்டித்து கூடங்குளம் கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் இன்று கருப்பு கொடி கட்டினர். கூடங்குளம் பஜார் பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் கருப்பு கொடி கட்டப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூடங்குளம் ஊராட்சிக்கு சுனாமி மற்றும் கே.கே.என்.பி.பி. குடிநீர் திட்டங்களின் மூலம் வழங்கப்பட வேண்டிய 8 லட்சம் லிட்டர் குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது புதிய குடிநீர் திட்டத்திலும் எங்களை சேர்க்கவில்லை.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தையும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் கண்டிக்கிறோம் என தெரிவித்தனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார்.
- கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது.
பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைத்திருந்தார்.
இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஷிப்ட் அடிப்படையில் பணி செய்து வரும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
காலை உணவில் இட்லி, பொங்கல், கிச்சடி போன்றவையும், மதியம் கலவை சாதம், ரசம், சாம்பார், கூட்டு, பொரியல். இரவில் சப்பாத்தி அல்லது ரொட்டி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் உள்ள போளிவாக்கம் ஊராட்சி அத்திக்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் சென்னை உள்பட 25 மாநகராட்சிகள், 141 நகராட்சிகள், 479 பேரூராட்சிகளில் பணிபுரியும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 689 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெப்பம் தாங்கும் பையில் வைக்கப்பட்ட உணவு கலன்களை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். விழா மேடையில் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆவடி நாசர், மதிவேந்தன், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், அரசு துறை செயலாளர் சத்தியபிரதா சாகு, மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
- தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
சென்னை:
சென்னையில் மின்சார பஸ் சேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. முதன் முதலாக வியாசர்பாடி பணிமனையில் இருந்து பாஸ்கள் இயக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரும்பாக்கம், பூந்தமல்லி ஆகிய பணிமனையில் இருந்து மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மொத்தம் 625 மின்சார பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் இதுவரையில் 380 மின்சார பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 225 ஏ.சி. பஸ்கள் விடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக பல்லவன் இல்லம் பணிமனையில் இருந்து 145 மின்சார பஸ்கள் இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை பணிமனையில் இருந்து 100 மின் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மின்சார பஸ்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தினமும் சுமார் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள்.
இதுவரையில் 225 ஏ.சி. மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 குளு குளு சொகுசு பஸ்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3000 ஏசி வசதி அல்லாத பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக 1000 மின்சார ஏ.சி. பஸ்கள் இயக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் படிப்படியாக ஏ.சி. சொகுசு பஸ்கள் விடப்பட்டு உள்ளது.
டபுள் டக்கர் 20 ஏ.சி. பஸ் விடுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் இந்த பஸ்கள் பயன்பாட்டுக்கு வரும்.
முதல் கட்ட மின்சார பஸ் வசதி இந்த மாத இறுதிக்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்த பின்னர் 2-வது கட்டமாக 600 மின்சார பஸ்கள் கொண்டு வரப்படும். பொதுமக்கள் தங்கள் பயணத்தை மாற்றி வருகிறார்கள். நெரிசலில் பயணம் செய்வதை தவிர்த்து, வசதியாக அமர்ந்து செல்லவே விரும்புகிறார்கள். அதனால் ஏ.சி. மின்சார பஸ்களில் இனி வரும் காலங்களில் அதிக பயன்பாடு உள்ளதாக இருக்கும் என்றார்.
- ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
- மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். அதன் விவரம் வருமாறு:
* ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் ரூ.42.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 சமத்துவபுரங்களை தொடங்கி வைக்கிறார்.
* நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி முதல் கொடமலை வரை ரூ.34.12 கோடியில் அமைக்கப்பட்ட சாலையை தொடங்கி வைக்கிறார்.
* ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட பாலம், அங்கன்வாடி, சமுதாயக்கூடம், பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
* தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,238.19 கோடி மதிப்பீட்டில் கட்டிய 9,696 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைக்கிறார்.
* கிண்டியில் ரூ.14.50 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதல் கடல் ஆமை மையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
* கடல் ஆமை பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர் தமிழ்நாடு நகர்ப்புற பசுமை கொள்கை 2026ஐ வெளியிடுகிறார்.
* பல்வேறு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ரூ.348.59 கோடியில் கட்டப்பட்ட நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள் திறந்து வைக்கிறார்.
* மருத்துவமனைகளில் ஓமியோபதி, சுகாதார நிலையக் கட்டிடங்களையும் திறந்து வைக்கிறார்.
* கும்மிடிப்பூண்டியில் ரூ.2,091 கோடி முதலீட்டில் 2,104 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிட்சுபிஷியின் குளிர்சாதன இயந்திரம், கருவி உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.
- தூய்மைக் காவலர்கள் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
- கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்கும் வகையில், தூய்மைக் காவலர்கள் கிராம ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்று குப்பைகளைச் சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து, உரமாக்குதல், நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு அனுப்புதல் மற்றும் ஊராட்சியை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றனர். திடக்கழிவு மேலாண்மையில் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களின் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
- சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
- இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
வானத்திலிருந்து திடீர் சத்தம் கேட்டதால் மயிலாடுதுறை மக்கள் மீண்டும் அச்சத்தில் உள்ளனர் என்று குறிப்பிட்டு ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அளித்துள்ள விளக்கத்தில், "மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை 10.20 மணி முதல் 10.30 மணி வரை அதிக சத்தம் உணரப்பட்டதாக பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட சத்தம் 'ஜெட்' பயிற்சி விமான சத்தம் என்பதையும், நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் எதுவும் மேற்கண்ட பகுதிகளில் ஏற்படவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
- பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில்,
சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதி எண் 311 ஐ நிறைவேற்றக் கோரி, ஐந்து ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தும், அதனைக் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி வந்தது திமுக அரசு. வேறு வழியின்றி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராடி வருகின்றனர். அவர்களை இப்படி சாலைக்கு வர வைத்தது திமுக அரசின் திட்டமிட்ட அலட்சிய மனப்பான்மை மட்டுமே.
தற்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஜனவரி மாத ஊதியத்தை வழங்காமல், மேலும் அவர்களுக்கு அநீதி இழைத்திருக்கிறது திமுக அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நிர்வாகத் தவறுகளுக்காக, ஆசிரியப் பெருமக்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு.
தமிழகத்தில், குற்றவாளிகள் எந்த பயமுமின்றி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட அப்பாவி பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
பொதுமக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை, ஊழல் திமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். உடனடியாக, ஆசிரியர்களுக்கு, ஜனவரி மாத ஊதியத்தை முழுமையாக வழங்குவதோடு, சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு, பொது நூலகங்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.150 கோடி போதுமானது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2021-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெளியிட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், 'ஊர்ப்புற நூலகர்களாகக் கிராமங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குக் கால முறையிலான பணி வழங்கப்படும் (வாக்குறுதி எண்-178)' என்று வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொத்து வரியில் 10 சதவீதம் தொகை நூலக வரியாக வசூலிக்கப்பட்டு நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது.
இந்த வகையில் மட்டும் நூலகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது. ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு, பொது நூலகங்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.150 கோடி போதுமானது. ஆனால், அதை செய்வதற்குக் கூட தி.மு.க. அரசுக்கு மனமில்லை. அனைத்துக் கோரிக்கைகளையும் தி.மு.க. அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள்.
- இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் 'பிங்க்' பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் (கட்டணமில்லா பஸ்) கடந்த மே 2021-ல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று, 5 வழித்தடங்களில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 2 பஸ்கள் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
இப்பஸ்கள், பிராட்வே முதல் எண்ணூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம், செங்குன்றம் முதல் வள்ளலார் நகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.
அதேபோல், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பிரத்யேகமாக 50 பொலீரோ 4 சக்கர வாகனங்கள் மற்றும் 5 பிங்க் ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.






